பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம்... பள்ளிமாணவிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. 9பேர் கைது!!

அண்மையில் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இந்நிலையில் அதேபொள்ளாச்சியில்16 வயது நிரம்பிய பள்ளி மாணவி ஒருவர் 9 நபர்களால்கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pollachi

கடந்த வாரம் தனது பதினாறு வயது நிரம்பிய மகளை காணவில்லை எனபெற்றோர் கொடுத்தபுகாரை விசாரித்த பொழுது இந்தக் கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் குமரன் நகரை சேர்ந்த அமானுல்லா என்ற இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அந்த சிறுமியிடம் அவன்திருமண ஆசை வார்த்தை கூறி பழகி கூட்டிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

pollachi

அமானுல்லா கூறிய வார்த்தையை நம்பி வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த மாணவியை அவனது நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. சிறுமி கடத்தப்பட்டதை அடுத்து கடத்தியவர்களைபிடிக்க காவல்துறையினர் முயன்ற நிலையில், சிறுமியை ஆழியாறு சாலையில் விட்டுவிட்டு இளைஞர்கள் தப்பி விட்டனர்.

pollachi

சிறுமியை மீட்டகாவல்துறையினர் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அமானுல்லா, பகவதி, முகமது அலி, டேவிட் செந்தில், முகமது ரபிக், அருண் நேரு, சையத் முகமது, ஷேக் முகமது, இர்ஷ்ஹாக் உட்பட 9 பேரைபோக்சோசட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

pollachi

கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரும் பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடிய பிரபு என்பவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணியை போலீசார் தீவிரமாக கையில் எடுத்துள்ளனர்.

arrest police pollachi sexual abuse
இதையும் படியுங்கள்
Subscribe