Advertisment

தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மெத்தையில் இருந்து விழுந்து மரணம்! 

Nine month old baby passed away

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் சிறு நாவலூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு ரித்தனா என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த 9ஆம் தேதி குழந்தை மெத்தையின் மீது உறங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மேலிருந்து கீழே விழுந்து உள்ளது.

தொடர்ந்து குழந்தை அழுகையை நிறுத்தாமல் இருந்த நிலையில், சிறிது நேரத்தில் சமாதானம் செய்து வைத்து குழந்தையை மீண்டும் உறங்க வைத்துள்ளனர். இதனையடுத்து குழந்தை தொடர்ந்து வாந்தி எடுத்ததால், திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதனை செய்த போது, குழந்தையின் மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைக்குத்தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் குழந்தை நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உப்பிலியபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe