Advertisment

Nine District Rural Local Elections - Observers Appointed!

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும், தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Advertisment

இந்த நிலையில், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் - அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்டம் - சம்பத், விழுப்புரம் மாவட்டம் - பழனிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் - விவேகானந்தன், வேலூர் மாவட்டம் - விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை மாவட்டம் - மதுமதி, திருப்பத்தூர் மாவட்டம் - காமராஜ், நெல்லை மாவட்டம் - ஜெயகாந்தன், தென்காசி மாவட்டம் - பொ. சங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பார்வையாளர்கள் செப்டம்பர் 22ஆம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று பணியைத் தொடங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.