குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று (02.08.2021) தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் திருவுருவப் படத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சென்னையில் தங்கியுள்ள அவர், இன்று காலை விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர்மூலம் ஊட்டி செல்கிறார். பிறகு சாலை மார்க்கமாக பயணம் செய்யும் அவர், ஊட்டி ராஜ்பவனில் தங்குகிறார். அதனைத் தொடர்ந்து குன்னூரில் உள்ள ராணுவ அதிகாரிகளுடன் பகல் 12.30 மணி அளவில் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர், குடியரசுத் தலைவர் ஊட்டி தாவரவியல் பூங்காவைச் சுற்றிப்பார்க்க உள்ளார். இதற்காக கோவையில் இருந்து இரண்டு பேட்டரி கார்கள் வரவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கோவை மற்றும் ஊட்டியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.