Advertisment

குன்னூரில் கனமழை- வெள்ளப்பெருக்கு!

தமிழகம் முழுவதும் பரவலாக பருவமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. மேலும் சில இடங்களில் நிலச்சரிவும் மற்றும் தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

nilgiris districts heavy rain flood

இதனிடையேதென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

main river tenkasi kutralam flood heavy rain nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe