Advertisment

சயான், மனோஜ் ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது!

nilgiris district kodanad case chennai high court

Advertisment

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனு மீது இன்று (28/08/2020) உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2017ஆம் ஆண்டு கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளியைக் கொன்று மர்ம கும்பல் கொள்ளையடித்தது. கொலை, கொள்ளை தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த 11 பேர் மீதான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் சயான், மனோஜ் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கு அரசு தரப்பு, மூன்று மாதத்தில் விசாரணை முடிக்கப்படும் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Advertisment

இந்த நிலையில், இரண்டாவது முறையாக இரண்டு பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் இன்று (28/08/2020) உத்தரவு பிறப்பிக்கிறார்.

chennai high court kodanadu nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe