தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் சுமார் 30 லட்சம் டிஜிட்டல் பாக்ஸ்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவியை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் அரசு கேபிள் டிவியில் முக்கிய பொருப்பில் உள்ளவர்களை தங்கள் வசத்தில் வைத்து மிக சொற்ப அளவிலான செட்டாப் பாக்ஸ்களை பெயரளவில் விநியோகித்துவந்தனர். இதில் மாவட்டத்திலுள்ள கூடலூர் , பந்தலூர் தாலூக்காவிற்கு அரசு கேபிள் டிவி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் எந்த விதமான உதவியும் இல்லாத நிலையிலும் அங்கிருக்கும் டிஸ்டிரிபியூட்டர் மூலம் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள நான்கு தாலூக்காக்களுக்கு சுமார் 10 பேர் உதகை அலுவலகத்தில் பணிபுரிந்தும் இதுவரை சுமார் 13000 செட்டாப்பாக்ஸ்கள் மற்றுமே வழங்கப்பட்டுள்ளது இதற்கு சான்றாக அமைகிறது.
குறிப்பாக கடந்த 6 மாதத்தில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேல் செட்டாப் பாக்ஸ்களை நிறுவ உடந்தையாக இருந்த அரசு கேபிள் டிவியில் பணிபுரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுபெற்றிருந்தது.
இதுகுறித்து சென்னையிலுள்ள அரசு கேபிள் டிவி தலைமையகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் அனைத்து தரப்பினரிடமிருந்தும் சென்றுவந்த நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை வேருடன் பிடுங்கி எரியாமலும், அவர்கள் மீது விசாரணை கமிஷன் ஏதும் அமைக்கப்படாமலும் வெறுமனே வேறு பணிக்கு மாற்றலாகி இருப்பதும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்து பல்வேறு ஊழல்களுக்கு காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இருந்துவருபவர் மீது நேர்மையாக பணியாற்றிய பல அதிகாரிகள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை சுமத்தியும் அவர்மீது மாவட்ட நிர்வாகமோ, கேபிள் டிவி நிறுவனமோ நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துவருவதே மேன்மேலும் குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கு காரணமாக உள்ளதென சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

இதனிடையேஅரசு கேபிள் டிவியில் ஊழல் செய்து வரும் ஒருவர் தற்போது சென்னையை சேர்ந்த ஆளங்கட்சி பிரமுகருக்கு மட்டும் சிக்னல் வழங்கி நீலகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தோரும் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வழங்க முயற்சி செய்துவருவது கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அரசு கேபிள் டிவி சிக்னல் வழங்கவேண்டும் என்ற கோரி்க்கை வைத்திருந்த கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை அரசிற்கு எதிரிகளாக சித்தரித்து நாடகமாடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு கேபிள் டிவி சிக்னல் வழங்கினால் எடுக்க தயாராக உள்ள ஆப்பரேட்டர்களுக்கு தேவையில்லாமல் மிரட்டல் விடுவதோடு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் செய்துவரும் அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சி செய்யும் இவர்கள் மீது தமிழக அரசின் இரும்புகரம் பாயாவிட்டால் நீலகிரி மாவட்டத்தில் கிராமங்கள் தோரும் பெரும் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், தமிழக அளவிலான கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் இணைந்து போராட்டங்கள் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நீலகிரி மாவட்டத்தின் அமைதியை நிலைநாட்டும் வகையில் அரசு கேபிள் டிவி எடுக்க விரும்பும் ஆப்பரேட்டர்கள் உள்ள இடத்தில் புதிதாக யாரையும் நியமனம் செய்யவேண்டாம் எனவும், அரசின் சிக்னல் பெற தயாராக இல்லாத இடங்களில் வேண்டுமானால் பிற ஆப்பரேட்டர்கள் முலம் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)