NILGIRIS AND THENI DISTRICTS HEAVY RAIN POSSIBLE REGIONAL METEOROLOGICAL CENTRE

Advertisment

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரி (நீலகிரி)- 12 செ.மீ., கிண்ணக்கொரை- 10 செ.மீ., குந்தா பாலம், குன்னூர் (நீலகிரி), திருச்சுழி (விருதுநகர்), பரமக்குடி (ராமநாதபுரம்) தலா 7 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.