Advertisment

காத்திருந்தும் வராத காதலன்... வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மணப்பெண்!!

nilgiri love marriage incident

நீலகிரி மாவட்டம் திருமண மேடையிலேயே மணப்பெண் 'என்னை அழைத்துச் செல்ல என் காதலர் வருவார்' என திருமணத்தை நிறுத்திய வீடியோ காட்சி வைரலாகி இருந்தது. நீலகிரிமாவட்டம் மட்ட கண்டியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் துனேரியைசேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisment

வடுகர் இனத்தில் திருமணம் நடப்பதற்கு முன்பு மணமேடையில் மணமகளிடம் மூன்று முறை திருமணத்தில் விருப்பம் உள்ளதா எனக் கேட்ட பிறகு தாலி கட்ட வேண்டும் என்ற முறை உள்ளதால் அதன் படி மூன்று முறை பிரியதர்ஷினியிடம் சம்மதம் கேட்க மௌனமாக இருந்த மணப்பெண் பிரியதர்ஷினி தன்னை அழைத்து செல்ல பார்த்திபன் என்ற தனது காதலர் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என கூறியவரே தாலி கட்ட வந்த ஆனந்தின் கைகளை தடுத்தார்.

Advertisment

அப்போது அங்கே இருந்த மணப்பெண்ணின் உறவினர்கள் மணப்பெண்ணை தாக்க முற்பட்டனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி இருந்தது. அன்று மாலைவரை மணப்பெண் காத்திருந்தும் அவர் கூறிய காதலன் வராததால் மணப்பெண் வீட்டார் மணமகளைவீட்டில் இருந்து வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. நாள் முழுவதும் காத்திருந்தும் காதலன் வராததால் அவரைக் காண்பதற்காக மணப்பெண் பிரியதர்ஷினி சென்னைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

video Love marriage nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe