/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a5400.jpg)
புதுச்சேரியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி, கஞ்சா போதை இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சோக சம்பவத்தின் வடுக்கள் மறையும் முன்னரே நீலகிரியில் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து சிறை தண்டனை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகை அருகே அஜித் குமார் என்ற 22 வயது இளைஞர் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அந்த நபர் மனநலம் சரியில்லை என விடுதலை பெற்று வெளியாகி இருந்தார். இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் உள்ள ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில் அஜித்குமார் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முதல் வழக்கை விசாரித்த உதகமண்டலம்-நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளது. சிறையில் இருந்து வந்த நபர் மீண்டும் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)