Advertisment

ஒரு ஏக்கர் வாழைக்கு  5லட்சம் நிவாரண நிதி!  வழங்க மறுத்தால்   இடைத்தேர்தலை புறக்கணிப்போம்!!நிலக்கோட்டை மக்கள் உறுதி

n

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற மன்ற தொகுதிக்கு கூடிய விரவில் இடைத்தேர்தல்நடக்க இருக்கிறது.

Advertisment

இந்த நிலையில் தான் திடீரென திசை மாறிய கஜா புயலால் நிலக்கோட்டை தொகுதியில் உள்ள விளாம்பட்டி, மட்டப்பாறை, அனைப்பட்டி, சொக்குபிள்ளைபட்டி, சித்தர்கள் நத்தம் உள்பட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடியான ரஸ்த்தாலி, செவ்வாழை, கற்பூரவள்ளி, முப்பட்டைநாட்டு உள்ளிட்ட பல வகையான வாழை ரகங்கள் சாகுபடிகளை அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் செய்து இருந்தனர்.

Advertisment

nila

இந்த வாழை சாகுபடி மூலம் ஒவ்வொரு வாழையிலும் வாழைகாய் காய்த்துகூடிய விரவில் முழுபலனை விவசாயிகள் அடையும் சமயத்தில் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் மையம் கொண்ட கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியதின் மூலம் இப்பகுதிகளில் போடப்பட்ட 40ஆயிரம் வாழை மரங்கள் ஒடிந்தும் வேறோடு சாய்ந்தும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்து இருப்பதை கண்டு விவசாயிகள் மனம் நொந்து வேதனை அடைந்து வருகிறார்கள்.

இது பற்றி அப்பகுதியை சேர்ந்தவிவசாயிகள், இந்த புயலால் வாழை விவசாயமே அழித்து போய் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் இருந்து வருகிறார்கள். அப்படி இருந்தும் கூடஏக்கர் கணக்கில் சேதம்அடைந்து கிடக்கும் வாழையை பார்வையிடமாவட்டத்தில் இருந்து ஒரு அதிகாரி கூட வரவில்லை. அந்தந்த பகுதிகளில் உள்ள தலையாரிகளை அனுப்பி வாழை சேதம் விபரங்களை கேட்டு வரச் சொல்லி இருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாம். அதன் மூலம் விவசாயிகளுக்கு எந்தநன்மையும் ஏற்பட போவது இல்லை. அதுனால மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட வாழை சேதாரங்களை ஆய்வு செய்து ஒரு ஏக்கர் வாழை சாகுபடிக்கு 5 லட்சம் வீதம் புயல் நிவாரண நிதியாக ஒவ்வொரு வாழை விவசாயிக்கும் இந்த எடப்பாடி அரசு நிவாரண நிதி வழங்க முன் வரவேண்டும். தவறினால் வரக்கூடிய இடைத்தேர்தலை புறக்கணிப்போம் என டென்ஷனாகவே கூறினார்கள்.

nilakottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe