Advertisment

நிலக்கோட்டை தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.களுடன் திமுக போட்டி..!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதி அதன் அடிப்படையில் தான் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவரான பொன்னம்மாளின் உறவினர் தான் திமுக வேட்பாளரான வழக்கறிஞர்சௌந்தரபாண்டியன் இப்படி காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த சௌந்திரபாண்டியன் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திமுகவில் ஐக்கியமாகி திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக இருந்து வருகிறார்.

Advertisment

soundarpandiyan

இவருடைய சொந்த ஊர் நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டி ஆகும். இந்த செம்பட்டியில் இருந்து கொண்டுதான் வழக்கறிஞர் தொழில் செய்துவரும் சௌந்திர பாண்டியன், கட்சி தலைமை அறிவிக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு கட்சிக்காரர்களுடன் நெருக்கமாக இருந்து கொண்டு கட்சி பணியாற்றி வருகிறார். அதோடு கட்சிக்காரர்கள் மற்றும் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தானே முன் சென்று பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து தன்னால் முடிந்த உதவிகளையும் செய்துவருகிறார். இதன் மூலம் கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து வருகிறார்.

Advertisment

அதோடு கழக துணை பொதுச் செயலாளரும், துணைச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஐ பெரியசாமி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் ஆகியோரின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.

அதன் அடிப்படையில்தான் இத்தொகுதிக்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து நேர்காணலுக்கு சென்றுவிட்டு திரும்பிகூட அதில் யாரை தேர்தல் களத்தில் இறங்கினால் வெற்றி பெற முடியும் என ஐ. பெரியசாமி, மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோருடன் கட்சிப் பொறுப்பாளர்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதின் பேரில் கட்சி மற்றும் கூட்டணி கட்சி பலத்துடன்இருக்கக்கூடிய சௌந்திரபாண்டியனுக்கு சீட்டு கொடுக்க முடிவு செய்தனர். அதை ஸ்டாலினிடம் வலியுறுத்தியதின் பேரில்தான் நிலக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக சௌவுந்திரபாண்டியனை ஐ.பி. பரிந்துரையின் பெயரில் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார் என பேசப்படுகிறது.

thenmozhi

அதுபோல் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தேன்மொழியை களமிறங்கியிருக்கிறார்கள். தேன்மொழி கடந்த 2006-ல் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பெயர் சொல்லும் அளவுக்கு தொகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் சரிவர செய்யவில்லை. அதுபோல் தேன்மொழி என் கணவர் சேகர் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவராகவும். பேரூர் கழக செயலாளராகவும் இருந்தும் கூட நகர மக்களின் அடிப்படை வசதிகளை சரிவர பூர்த்தி செய்யவில்லை அந்த அளவுக்கு தேன்மொழி மீதும் அவருடைய கணவர் சேகர் மீதும் மக்கள் மத்தியில் ஏற்கனவே ஒரு அதிருப்த்தி இருந்து வருகிறது.

அதுபோல் ஆட்சி வந்தவுடன் யார் அமைச்சரோ அந்தப்பக்கம் இவர்கள் சாய்ந்து விடுவதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த முறை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆதரவாளராக இருந்த தேன்மொழியும், கணவர் சேகரும் தற்பொழுது சிட்டிங் அமைச்சரான வனத்துறை அமைச்சர் சீனிவாசனின் ஆதரவாளராக இருந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் தான் அமைச்சர் சீனிவாசனின் பரிந்துரையின் பெயரில் தேன்மொழிக்கு மீண்டும் சீட் கிடைத்திருக்கிறது என இவர்கள் தரப்பில் பேசப்படுகிறது. ஆனால் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியும் தொகுதியில் உள்ளவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதுபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏவும். டிடிவி ஆதரவாளருமான தங்கத்துரையும் மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தொகுதியில் களம் இறங்க இருப்பதால் தேர்தல் களமும் சூடு பிடிக்கப் போகிறது.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe