Advertisment

இரவுக்குள் முடிவு தெரியும்... சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் சிபிசிஐடி ஐஜி பேட்டி 

Into the night we know the ... CBCID IG interview in the case of the father and son of Satankulam

Advertisment

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றஜெயராஜ்,பென்னிக்ஸ்ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்தசம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,

இந்த வழக்கில்15 நாட்கள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா தற்பொழுது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் ஆகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் ஆஜரான மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட்பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சிபிசிஐடி ஐஜி உயிரிழந்தஜெயராஜ், பென்னிக்ஸ்ஆகியோரின் மரணம் தொடர்பாக அவரது வீட்டில் விசாரணை நடத்தி வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தத ஐஜி சங்கர் கூறுகையில், “சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து நடுநிலையான ஒரு விசாரணை தொடங்கி இருக்கிறது. விசாரணை போகப்போக உங்களுக்கு முடிவு தெரியும். விசாரணை தொடர்ந்துநடைபெற்று வருகிறது. மாலை நேரத்திற்குள் உங்களுக்கு தெரிந்துவிடும் அல்லதுஇன்று இரவுக்குள் உங்களுக்கு முடிவு தெரியும். சாத்தான்குளம் தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை திருத்தம் செய்யப்படவுள்ளது.12குழுக்கள் அமைக்கப்பட்டு தரமான விசாரணையைபல கோணங்களில் மேற்கொண்டு வருகிறோம்என்றார்.

Advertisment

மேலும் பென்னிக்ஸின்செல்போன் கடைக்கும் நேரில் சென்று சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டார்.

investigated police CBI sathankulam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe