சென்னை அம்பத்தூரில் கருக்கு பகுதியில் நேற்று நள்ளிரவில் தனியார் கார் சர்விஸ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு முழு கார் எரிந்து சேதமடைந்தது.
தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் சர்விஸ் சென்டர் வளாகத்தில் இருந்த ஒரு கார் மட்டும் முழுவதும் எரிந்து நாசமானது.