/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nia3232.jpg)
கார் வெடிப்பு நடந்த உக்கடம் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த அக்டோபர் 23- ஆம் தேதி அன்று கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கார் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வெடிப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழக காவல்துறையின் தனிப்படை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், கார் வெடிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம், தமிழக காவல்துறை அதிகாரிகள் ஒபபடைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவம் நடந்த பகுதி முழுவதையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)