நாகை மாவட்டம் நாகூர் மியாந்தெருவில் உள்ள முகமது அஜ்மல் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.
முன்னதாக இன்று காலையில் கோவையில் ஜிஎம் நகர் மற்றும் லாரிபேட்டையில்தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது நாகை மாவட்டத்தில் என்ஐஏசோதனை தொடர்ந்து வருகிறது.நாகையில் ஏடிஎம் என்ற தனியார் காலனியில் உள்ள முகமது அஜ்மல்என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.