தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்துவது வழக்கம். கோவை உள்ளிட்ட இடங்களில் அண்மையில் சோதனை நடத்தி இருந்தது. அதேபோல் அண்மையில் திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று சிவகங்கையில் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. இளையான்குடியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா அமைப்பின் மாநில பேச்சாளர் முகமது ரோஸ்ஸான் என்ற நிர்வாகியின் உறவினர்களின் வீடுகளில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.