பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய புகாரில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
--LINKS CODE------
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை காரணமாக அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக என்ஐஏ நடத்தி வரும் இந்த விசாரணையில் கடந்த வாரம் டெல்லியில் 14 பேர் என்ஐஏ வால் கைது செய்யப்பட்டு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை பத்து நாட்கள் காவலாளர்கள் பிடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து நீதிமன்றம் பத்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.