
கோவை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் என்ஐஏ திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் அண்ணாமலை நகரில்மாவோயிஸ்ட் காளிதாஸின் சகோதரர்சிங்காரம் என்பவரது வீட்டில்என்ஐஏ சோதனை நடத்திவருகிறது. மாவோயிஸ்ட் காளிதாஸ் கேரள சிறையில் உள்ள நிலையில், தற்போது அவரது சகோதரர் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அதேபோல் கோவையில் 3 இடங்களில்மாவோயிஸ்ட் ஆதரவாளர் வீடுகளில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுவருகிறது.
புளியகுளத்தில்மருத்துவர் தினேஷ் என்பவரதுவீட்டிலும்,டேனிஷ்என்பவரது வீட்டிலும்என 3 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. தேனியிலும்இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)