
அண்மையில் தமிழகத்தில் பல இடங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஆய்வு நடத்தியிருந்தது. தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் சில குறிப்பிட்டஇயக்கங்களின்நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து பிஃஎப்ஐ உள்ளிட்ட 8 இயக்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கல்லூரி சாலையில் வசித்து வருகிறார் விக்கி என்கின்ற விக்னேஸ்வரன். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியான இவர் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்த மூன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் சில கையேடுகள், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)