தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகிறது.
சென்னை, நெல்லை, தென்காசி, கோவை உள்படத்தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகாலை முதலே சோதனையானது தொடங்கி நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்துள்ள அச்சன்புதூரில் அப்துல்லா என்பவரது வீட்டிலும், நெல்லை கரிக்காதோப்பு பகுதியில் மன்சூர் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ (தேசியப் புலனாய்வு முகமை) சோதனை நடத்தி வருகிறது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைது நடவடிக்கைகளும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை போன்றே கர்நாடகா, கேரளாவிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.