NIA raids at 45 places in Tamil Nadu

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், என்.ஐ.ஏ. எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட 45 இடங்களில் தேசியபுலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களிலும் என மொத்தம் தமிழகம்முழுவதும் 45 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றுவருகிறது. கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் நிகழ்ந்த கார் வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.