தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும்தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 'ஹிஜ்புத் தகர்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் உதவி புரிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு வெளிவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.