தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ எனப்படும் தீவிரவாத தடுப்பு யூனிட்டான தேசிய புலனாய்வு முகமையின் கொச்சி டிட்டாச்மெண்ட் அதிகாரிகள் அங்குள்ள கே.டி.எம். தெருவிலுள்ள அபுல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அபுல்கான் சென்னையில் ஆக்டிங் டிரைவராகப் பணியிலிருப்பவர். இவரது தந்தை ரிபாய்தின். இவர் வீட்டில் இல்லை. வீட்டில் அபுல்கானின் தாயும் மனைவியும் மட்டுமே இருந்திருக்கின்றனர். இதில் அபுல்கான் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் தொடர்பிலும் இருப்பவர். மேலும் உணர்ச்சிவசப்பட்டு வாட்ஸ்அப் பதிவிடுபவராம். அப்படியான அவரின் ஒரு வாட்ஸ்அப் தகவலால்நேற்றுகாலை 6 மணிக்கு அவரது வீட்டுக்குவந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என விசாரித்துவிட்டுப் போயுள்ளனர் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.