தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் அண்மையாகவே தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் மதுரையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே முகமது தாஜுதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனையானது நடைபெற்று வருகிறது. போலி ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் வாங்கிய விவகாரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக, முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி முகமது தாஜுதீனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.