கோவையில் ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் உமர் பாரூக், சனாபர் அலி, சமீனா முபின், முகமது யாசீர் , சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்ததால் ஹய் அலாட் கொடுக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 NIA officials raid five locations in Govai

Advertisment

Advertisment

இவர்களுக்கும் தமிழகத்தில் புகுந்த தீவிரவாதிகளுடன் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் இவர்கள் அனைவரும், இதற்கு முன்னும் மத்திய தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் சிக்கி விசாரணைக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிலையில் ஜனாபர் அலி கோவை உக்கடம், வின்சென்ட் ரோட்டை சேர்ந்தவர், இவர்வீட்டில் முதன் முறையாக சோதனை நடப்பதாக தெரியவருகிறது.