/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NIA323_0.jpg)
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து, என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் 14 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இரண்டு இளைஞர்களின் நடமாட்டத்தை சுமார் 10 நாட்களாக என்ஐஏ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இதையடுத்து, சென்னை, கோவை, சேலம் பகுதிகளில் இருந்து வந்த 10- க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களிடம் 14 மணி நேரமாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பிடிபட்ட இரண்டு பேரின் விவரங்கள் குறித்த தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)