NIA officials are interrogating two persons in Tiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகரத்திற்கு அடுத்து பெரிய ஊர் நல்லவன்பாளையம். இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்டது சமுத்திரம் கிராமம். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.

Advertisment

இந்நிலையில், இன்று காலை தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள்திடீரென இருவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் இருந்த இருவரை அழைத்துக் கொண்டு வந்து திருவண்ணாமலை தாலுக்கா காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருவரைப்பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.