NIA Officers search in Tamil Nadu 

தமிழகத்தில் திருச்சி, மயிலாடுதுறை உட்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாத்திரக் கடை ஒன்றை நடத்தி வந்தார். இத்தகைய சூழலில் தான் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி (05.02.2019) இவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட 10 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரெழுந்தூர், வடகரை ஆகிய இரு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.