தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (09/06/2022) அதிகாலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு நிதி திரட்டியது தொடர்பான ஒரு வழக்கு என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் உள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் 'National Investigation Agency' எனப்படும் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, சென்னை மண்ணடியில் சாதிக் என்பவர், என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை (படங்கள்)
Advertisment