NIA investigation at 20 places in Tamil Nadu

தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்துவது வழக்கம். கோவை உள்ளிட்ட இடங்களில் அண்மையில் சோதனை நடத்தி இருந்தது.

Advertisment

NIA investigation at 20 places in Tamil Nadu

இந்நிலையில் இன்று திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் விசாரணையில் ஈடுபட்ட நிலையில் தற்பொழுது இந்த விசாரணையானது தமிழகத்தின் பல இடங்களுக்கு நீண்டிருக்கிறது. அண்மையில் கேரளாவில் சிக்கிய 300 கிலோ ஹெராயின், ஏ.கே 47 துப்பாக்கிகள் சிக்கிய வழக்கில் தமிழகத்தில் சுமார் 20 இடங்களில் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மண்ணடி, பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட 9 இடங்களிலும், திருச்சியில் 11 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment