நாகை அருகே உள்ள நாகூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முகமது அஜ்மல் என்பவரது வீட்டில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவது மீண்டும் அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nia in.jpg)
கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமையினர் சந்தேகத்தின் பெயரில் உள்ளவர்களை விசாரித்தும் சோதனையிட்டும் வருகின்றனர். தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பில் இருப்பவர்களின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் 6 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாகை அடுத்துள்ள நாகூர் மியாந்தெரு முகமது அஜ்மல் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொச்சினில் இருந்து விரைந்து வந்த டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான 3 என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் தமிழக போலிசார் 10க்கும் மேற்பட்டோர் நாகூர் அடுத்த சண்ணமங்கலம் சேவாபாரதி பகுதியில் வசித்து வந்த முஹம்மது அஜ்மல் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை அதிரடியாக நுழைந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nia in 2.jpg)
ஆனால் அங்கு முஹம்மது அஜ்மல் வீட்டில் இல்லை, அவர் நாகூர் மியாந்தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் இருந்ததும் தெரியவந்தது. பின்னர் நாகூர் மியாந்தெருவ வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் உறவினர் வீட்டில் தங்கியிருந்த முஹம்மது அஜ்மலிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் நாகூரில் மீண்டும் பரபரப்பு பற்றியிருக்கிறது.
Follow Us