தேச ஒற்றுமைக்கு எதிராகச் செயல்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாவா பக்ருதீன் என்பவர் தேசிய புலனாய்வு முகாமை எனப்படும் என்ஐஏ அமைப்பால் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டிலிருந்த புத்தகங்கள், டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சமூக வலைத்தளங்களில் பிற மத, சமூகம் குறித்து அவதூறு பரப்பியதாக முகமது இக்பால் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பாவா பக்ருதீனை அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.