Advertisment

என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு... 17 பேர் படுகாயம்... உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்!

Advertisment

நெய்வேலியில் உள்ளஎன்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளார் என்றும், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.

2-ஆம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளார். 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 17 பேரும் என்.எல்.சி. பொது மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தீ விபத்தில் சிக்கி உள்ளனர். அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை என்.எல்.சி. உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்

தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால், ஊழியர்களும், அப்பகுதி மக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதுவரை நெய்வேலி என்.எல்.சி யில் 2 மாதத்தில் 4 முறை தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்கின்றனர் ஊழியர்கள். என்.எல்.சி நிறுவனத்தில் பாதுகாப்பு பணி என்பது மெத்தமனாக இருப்பதும், அதிகளவு வேலை செய்யப்படுகிறது என்பதும் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Neyveli nlc
இதையும் படியுங்கள்
Subscribe