ADVERTISEMENT

நெய்வேலியில் சுரங்கம்-3 அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்! : பாமக வலியுறுத்தல் 

11:31 AM Dec 31, 2018 | rajavel

ADVERTISEMENT

பாமக பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நெய்வேலியில் சுரங்கம்-3 அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் நெய்வேலி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே 3 சுரங்கங்கள் அமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து ஆண்டுக்கு 28.50 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இதுவே தேவைக்கும் அதிகம் எனும் நிலையில், இப்போது சுரங்கம்-3 என்ற பெயரில் நான்காவது சுரங்கத்தை அமைக்க என்.எல்.சி. நிறுவனம் முடிவு செய்து, அதற்காக 12,125 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. தேவையற்ற இச் சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களால் 26 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரங்களை இழப்பர்.

என்.எல்.சி. நிறுவனம் தேவைக்கும் அதிகமாகவே நிலக்கரியை உற்பத்தி செய்கிறது. எதிர்காலத் தேவைக்காக 10,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் தரும் நிலங்களை உழவர்களிடமிருந்து பறிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி, புதிய சுரங்கத்திற்காக மணிமுத்தா, வெள்ளாறு ஆகிய ஆறுகளை விருத்தாசலத்திற்கு முன்பாக இணைக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனால், மழைக்காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும். இது ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் ஆபத்தாகும். மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கைப் பேரிடர் தடுப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சுரங்கம் -3 அமைக்கும் திட்டத்தையும், அதற்காக நிலங்களை பறிக்கும் முடிவையும் என்.எல்.சி நிறுவனம் அடியோடு ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT