Advertisment

'இனி எடுக்கும் நடவடிக்கை தமிழகத்திற்கே பாடமாக அமையும்' -அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

 'Next step will be a lesson for Tamil Nadu' - Minister Anbil Mahesh interview

Advertisment

அண்மையில் அனைத்துலக முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தமிழகத்தில் சில பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்கான விளக்கங்களை தமிழக அரசு கொடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது.

சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதேபோல் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை குறித்தபேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார். 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களை அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என்று தெரிவித்ததோடு மறுபிறவி குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது எனவும் பேசியுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளம்பியுள்ளது. மறுபிறவி குறித்து பேசுவது; ஆன்மீகம் குறித்து பேசுவது பள்ளி மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு எதிர்ப்புகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, புகார் பள்ளிக்கல்வித்துறையினுடைய உயரதிகாரிகளுக்கு சென்ற நிலையில், தமிழக அரசினுடைய கவனத்திற்கும் சென்றது.

Advertisment

 'Next step will be a lesson for Tamil Nadu' - Minister Anbil Mahesh interview

அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்? சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா? அல்லது தன்னிச்சையாக இவர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா? என்பது குறித்து முழுமையாக விசாரணை தொடங்கி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கல்விக்கு சம்பந்தம் இல்லாத; உரிய அனுமதி இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளையும் அரசுப் பள்ளிகளில் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 'Next step will be a lesson for Tamil Nadu' - Minister Anbil Mahesh interview

இந்நிலையில் சென்னையில் அசோக் நகர் பள்ளிக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்திருந்தார். அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் இதுகுறித்து எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாத அளவிற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களை சந்தித்து பேச போகிறேன். இதற்குக் காரணம் யாராக இருந்தாலும் சரி இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எடுக்கப்படும் நடவடிக்கையை பார்த்து இனிமேல் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் யாருமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப் போகிறேன். உங்கள் எல்லோருடைய உணர்வுகளும் என்னவோ அதேபோலத்தான் என்னுடைய உணர்வும் இருக்கிறது. தமிழக முதல்வர் வழிமுறைகளை கொடுத்துள்ளார். இதில் நாங்கள் எடுக்கப்படும் நடவடிக்கை தமிழகம்முழுமைக்குமான ஒட்டுமொத்த பாடமாக இருக்கும்' என்றார்.

TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe