கன்னியாகுமரி மாவட்டம்விளவங்கோடு பகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு சூழால் பாத்திமா நகரைச் சோ்ந்தவா்பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ. இவர்சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் தவறாகப் பேசி நெருங்கிப் பழகியதாகக் கூறி பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. நூற்றுக்கணக்கான பெண்களை இதுபோல திட்டம்போட்டு ஏமாற்றியுள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.
முதலில் பெண்களிடம் நல்லவர் போல பழகி அறிமுகமாகிக் கொள்ளும் பாதிரியார், நாளடைவில் தனது உண்மையான முகத்தைக் காட்டத் தொடங்கிவிடுவார். மெசேஜில் வசியம் செய்யும் வகையில் பேசி அவர்களை நம்ப வைத்து தன் வலையில் எளிதில் வீழ்த்திவிடும் பாதிரியார்., அவர்களுடன் தனியாக இருப்பதை பத்திரமாக வீடியோவாகவும் ஃபோட்டோவாகவும் எடுத்து வைத்திருந்துள்ளார். இதைத் தனது லேப்டாப்பில் பதிவேற்றம் செய்துகொண்ட பாதிரியார், யாருமில்லா தனியறையில் அமர்ந்து இதையெல்லாம் பார்த்து ரசிப்பது வழக்கமாம். அதுபோல், சம்பந்தப்பட்ட பெண்களை மீண்டும் கூப்பிட்டு மிரட்டி காரியம் சாதித்துக் கொண்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இப்படி பல பெண்களிடம் ஃபோனிலும் நேரிலும் பேசியுள்ள பாதிரியார்.,அவர்களை தான் விரும்புவதை போல செய்யச் சொல்லி அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட்டுகளாக எடுத்து வைத்துக் கொண்டிருந்துள்ளார். 200 வீடியோக்களை தாண்டிபாதிரியார் பாதுகாத்திருந்த ஆபாச விளையாட்டுகள் அனைத்தும் சமீபத்தில் லீக்காகி தமிழகத்தையே அதிர வைத்தது. வீடியோ வெளியானதும் பாதிரியார் தலைமறைவானார். இதையடுத்து, அவரை தீவிர தேடுதலுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ போலீசில் சிக்கியிருக்கும் நிலையில், அவரது ஆபாச லீலைகள் சங்கிலி தொடா் போல் நீண்டுகொண்டே போவது போலீசாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சைபா் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, "உண்மையை சொல்ல மறுத்த பாதிரியார்.,பெண்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களே விருப்பப்பட்டுத்தான் அப்படி என்னிடம் நடந்து கொண்டார்கள்" எனக் கூறியுள்ளார். போலீசாரின் 9 மணி நேர தீவிர விசாரணையில் இதை மட்டும் தான் கூறியிருக்கிறார். இந்த நிலையில் நாகர்கோவில் ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி15 நாட்கள் நீதிமன்ற காவலில் நாகர்கோவில் சப்-ஜெயிலில் பாதிரியார் அடைக்கப்பட்டுள்ளாா்.இதைத்தொடர்ந்து, பாதிரியாரின் தொடா்பில் இருந்த இளம் பெண்களும்குடும்ப பெண்களும் மற்ற இளம் பாதிரியார்களும் கலக்கத்தில் உள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பேசியமலங்கரை கத்தோலிக்க சபையை சேர்ந்த மூத்த பாதிரியார் ஒருவர், "பெனிட்டிக் ஆன்டோவை மலங்கரை கத்தோலிக்க சபையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தவுடன்அவர்தலைமறைவானார். இதைத்தொடர்ந்து கோட்டயத்தில் இருக்கும் மலங்கரை கத்தோலிக்க தலைமை சபைக்கு சுமார்20-க்கும் மேற்பட்ட இளம் பாதிரியார்கள் சென்று இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பெனிட்டிக் ஆன்டோவுடன் சேர்ந்து திருத்தொண்டர்பட்டம் பெற்றுபல்வேறு சபையில் பணியில் இருப்பவர்கள். இந்த விசயத்தில் இவா்களுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில்அவா்களாக முன்வந்து நேரில் விளக்கம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. எனக்கு தெரிந்தளவில் இளம் வயதிலே பாலியல் புகாரில் சிக்கிய முதல் பாதிரியார் இவா்தான். இவரால் ஒட்டு மொத்த மலங்கரை கத்தோலிக்க சபைக்கும் அவப்பெயர்ஏற்பட்டுள்ளது. பெனிட்டிக் ஆன்டோவை தற்காலிக நீக்கம் போதாது திருத்தொண்டர்பட்டத்தை திரும்ப பெற்று நிரந்தரமாக நீக்க வேண்டும்" என்றார்மலங்கரை கத்தோலிக்க சபையை சேர்ந்த மூத்த பாதிரியார்.
இந்த நிலையில் சைபர்க்ரைம் போலீசாரால் கைப்பற்றப்பட்டு இருக்கும் பாதிரியாருடைய 3 செல்போன்களில், ஒரு வாட்ஸ் அப் க்ரூப்பில்30 பாதிரியார்களும் 13 பெண்களின் பெயர்களும் இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. இந்த பெண்கள் யார் யார் என்ற விசாரணையும் தீவிரமாகியிருக்கிறது. அந்த க்ரூப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை தவிர வேறு எதுவும் பகிரப்படவில்லையாம். அதில் பள்ளி, கல்லூரிமாணவிகளும் குடும்ப பெண்களின் வீடியோக்களும்தான் இருக்கின்றன எனும் தகவல் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த பிரபல பெண் மருத்துவா் ஒருவர்பாதிரியாருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர்,பாதிரியார்பணிபுரிந்த சபைகளுக்கு அடிக்கடி வந்துள்ளார். அந்த பெண் மருத்துவர்இன்னொரு கிறிஸ்தவ பிரிவை சோ்ந்தவர். இந்த மருத்துவர், பாதிரியாரால் பாதிக்கப்பட்டு கருவுற்ற பெண்களின் கருவை கலைக்க உடந்தையாக இருந்திருப்பார்என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதற்கும் போலீஸ் விசாரணையில் முடிவு தெரிந்துவிடும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.