Skip to main content

அடுத்தகட்டத்தில் இறங்கும் மே-17 இயக்கம்; பெங்களூருவில் கூடும் தமிழ் அமைப்புகள்!

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

திருமுருகன் காந்தி தலைமையில் இயங்கும் மே-17 இயக்கம் சார்பில் பெங்களுருவில் நேற்று தமிழீழம்!  இன்று தமிழ்நாடு? என்ன செய்யப் போகிறோம் நாம்? என்ற தலைப்பில் நாளை காலை அரங்க கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அந்த அமைப்பினர் கூறியதாவது.


 

 The next move on behalf of the May 17 movement: Tamil organizations in Bengaluru


 

 

 

"தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம் எட்டு வழி சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம், கதிராமங்கலம் எண்ணெய் எடுப்பு, கெயில் பைப்லைன்கள், கடலூரில் பெட்ரோலிய மண்டலங்கள், தேனியில் நியூட்ரினோ, இயற்கை வளங்கள் சுரண்டல் என தமிழ்நாடு தொடர்ச்சியான பல்முனை தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மத்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து போராடுகின்ற மக்களை ஒடுக்கி வருகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?  பெங்களூரில் இதற்கான அரங்கக் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறோம். ஜூலை 8, 10 மணிக்கு 16, ஜெய்பீம் பவன் (கனரா வங்கி SC/ST அசோசியேசன்) 1st க்ராஸ் நியூ மிஷன் ரோடு, JC சாலை, பெங்களூர் இந்த முகவரியில் நடக்கவுள்ளது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கருத்துக்களை விவாதிக்கவுள்ளனர் அடுத்த கட்ட போராட்ட வடிவங்கள் பற்றியும் பேசப்படும்" என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

காதலிக்கு சரமாரி கத்திகுத்து; காதலன் வெறிச்செயல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 lover stabbed his girlfriend who forced her to marry him

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் ஆதித்யா சிங்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவரும் இவர்' அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம் பெண் ஒருவரும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆதித்யா சிங்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆதித்யா சிங் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆதித்யா சிங்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஆதித்சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மறுபடியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் ஆதித்யா சிங்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கம் போல மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை ஆதித்யா சிங், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். பின்பு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில்  காதலிப்பதாக கூறி  ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆதித்யா சிங்கை தேடி வருகின்றனர்.