The next moment Amit Shah left, the staff cut the sugarcane and bananas competitively ... !!

Advertisment

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்பொழுது (21/11/2020) சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும்அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நேற்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட அமித்ஷா,காணொளிக் காட்சி மூலமாகதிருவள்ளூர் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தைநாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.61,843 கோடியில்மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும்அடிக்கல் நாட்டினார். அதேபோல் கோவை அவிநாசி சாலையில் 1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் திட்டத்திற்கும்அடிக்கல் நாட்டினார்.309 கோடி மதிப்பில் சென்னை வர்த்தக மையத்தை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 3 திட்டங்கள் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களுக்குஅடிக்கல் நாட்டினார்.

Advertisment

The next moment Amit Shah left, the staff cut the sugarcane and bananas competitively ... !!

இந்நிலையில் இரண்டு நாள் சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு, இன்றுடெல்லி செல்ல சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் புறப்பட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. முன்னதாக அவரை வரவேற்பதற்காக சென்னை விமானநிலையத்தில் கரும்பு, வாழை மரங்கள் போன்றவை கட்டப்பட்டு பிரமாண்ட வரவேற்பு வளைவுவொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அமித்ஷா இன்று கிளம்பிய அடுத்து நொடியேஅங்கு கட்டப்பட்டிருந்த வாழை மரங்கள் கரும்பு உள்ளிட்டவைகளை துப்புரவுப்பணியாளர்களும் காவலர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அவிழ்த்து எடுத்து சென்றனர். துப்புரவுப் பணியாளர்கள் அவர்களது வாகனங்களிலும், அந்த வழியே வந்த மாநகராட்சி வாகனங்களிலும் கரும்புகள்,வாழைத் தார்கள் ஏற்றப்பட்டது.