K VEERAMANI

Advertisment

திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலி.பூங்குன்றன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை திலகர் திடலில் திராவிடர் கழகதலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சமூக நீதி மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisment

K VEERAMANI

அந்தக் கூட்டத்தில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தற்போதுதுணைத் தலைவராக உள்ள கலி.பூங்குன்றன் தமக்குப் பிறகு திராவிட கழகம் திராவிடர் கழகத் தலைவராக இருப்பார் என அறிவித்தார். முதல்நாள் நிகழ்ச்சியில் கருஞ்சட்டைபேரணி, கருத்தரங்கம், இசையரங்கம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.