5 நாட்களுக்கு மழை; மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

next 5 days rain fisherman dont go sea

சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம், புதுச்சேரிமற்றும் காரைக்கால் ஆகிய ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் கேரள லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என்பதால்மீனவர்கள் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்குகடலுக்குச்செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

fisherman rain Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe