வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் வரும் நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி திருவள்ளூர், திருப்பூர், தேனி, திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.