For the next 3 hours; Alert for 20 districts

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

டிசம்பர் 15, 16 ஆகி தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இந்தநிலையில், சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அறிவிப்பின்படி விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, அரியலூர், தஞ்சாவூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.