Advertisment

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

Advertisment

newyear celebration chennai police announcement peoples

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை மாநகர காவல்துறை.

Advertisment

சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை நாளை (31/12/2020) இரவு 10.00 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட அனைத்து விதமான உணவகங்களும் நாளை (31/12/2020) இரவு 10.00 மணிக்கு மேல் செயல்பட அனுமதியில்லை. சென்னையில் நாளை (31/12/2020) இரவு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர். சென்னையில் 300 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

கடற்கரை சாலைகள் அனைத்தும் நாளை (31/12/2020) இரவு 10.00 மணியுடன் மூடப்படும். சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் நள்ளிரவில் மூடப்படும். நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரிச்சார்ட்டுகளில் தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Police coronavirus Newyear celebration 2021
இதையும் படியுங்கள்
Subscribe