ADVERTISEMENT

''இந்த செய்தி மிகவும் வேதனை தருகிறது''-மு.க.ஸ்டாலின் இரங்கல்!

12:35 PM May 14, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசு பேருந்தில் நடத்துநரைப் பயணி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கும் நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் போதையிலிருந்த பயணி தாக்கியதில் அரசு பேருந்து ஓட்டுநர் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மதுராந்தகம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் நடத்துநர் அடித்து கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நடத்துநர் பெருமாள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பதும், விழுப்புரம் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

அரசு பேருந்தில் நடத்துநரைப் பயணி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். ''அரசு பேருந்தில் பயணி தாக்கி நடத்துநர் உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் வேதனையடைந்தேன். இறந்த அரசு பேருந்து ஓட்டுநர் பெருமாள் குடும்பத்திற்கு எனது இரங்கல்' எனத் தெரிவித்துள்ள முதல்வர், நடத்துநரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT