News note about the Deputy Chief Minister who caused controversy

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாடுகளுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி குறிப்பு பேசுபொருளாக மாறியது.

Advertisment

News note about the Deputy Chief Minister who caused controversy

தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி என்று குறிப்பிடலாமா? இது தமிழ்நாடு அரசின் டி.ஐ.பி.ஆரா(DIPR) இல்லை...திமுக ஐ.டி.விங்கா(DMK IT Wing) என்று அதிமுகவினர் விமர்சனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து திமுக இளைஞர் அணிச் செயலாளர் என்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பி திருத்தப்பட்டு, துணை முதலமைச்சர் உதயநிதி என்ற புதிய செய்தி குறிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.