Advertisment

"பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. தொலைக்காட்சி செய்தியாளர் குடும்பமே பலி.!"

சென்னை தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டதில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், அவரது மனைவி மற்றும் தாயார் உயிரிழந்தனர். கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னன் தெருவை சேர்ந்தவர் பிரசன்னா(32), இவர் தனியார் தொலைக்காட்சி (நியூஸ்-ஜெ.)செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அர்ச்சனா(28) தனியார் பள்ளி ஆசிரியை. இவரது தாயார் ரேவதி(59).

Advertisment

n

இன்று காலை இவர்களது வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. வீட்டில் இருந்து புகை வந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீடு முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. பிரசன்னா, அர்ச்சனா, ரேவதி ஆகிய மூவரும் இறந்து கிடந்தனர்.

n

Advertisment

சமையலறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சேதமடைந்து காணப்பட்டது. எனவே, அங்கு தீப்பிடித்து வீட்டிற்குள் பரவியதால் மூவரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

accident news
இதையும் படியுங்கள்
Subscribe