Advertisment

மணக்கோலத்தில் நேர்முக தேர்வில் கலந்துகொண்ட புது மணப்பெண்...!

The newlyweds who attended the interview

திருச்சி மாவட்டத்திற்கு 58 மினி கிளினிக்குள் அமைத்துக்கொள்ள தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுவரை 35 மினி கிளினிக்குகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Advertisment

கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை - எளிய மக்கள் மருத்துவ வசதியினை எளிதாகவும்இலவசமாகவும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மினி கிளினிக் திட்டம் கொண்டு வரப்பட்டது. சர்க்கரை நோய், காய்ச்சல், சளி, இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் இந்த அம்மா மினி கிளினிக்கில், செவிலியர் மற்றும் உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு திருச்சி மாவட்ட ஆட்சியர் அரங்கில் நேற்று (22.02.2021) நடைபெற்றது.

Advertisment

இதில் ஏராளமான விண்ணப்பதாரர்கள் வந்து நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். இதில் புதுமணப்பெண்ஒருவர் மணக்கோலத்தில் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார். திருச்சியைச் சேர்ந்த மகேஸ்வரன் - ராகவி ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், செவிலியர் பணிக்கு விண்ணப்பித்திருந்த ராகவி மணக்கோலத்தில் தனது கணவருடன், நேற்று நடந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார்.

mini clinic Officer District Collector trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe