
நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற தம்பதிகள் புதுமணத் தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே கனமழை காரணமாக பெரியாற்றுக்கொம்பையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும் நிலையில் திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன புதுமண தம்பதிகளான ராஜா-காவியா ஆகியோர் விருந்திற்காக உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். அப்பொழுது நீர்வீழ்ச்சியில் குளிக்கலாம் என ஆசைப்பட்டு 18ஆம் படி நீர்வீழ்ச்சி அருகே குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது ராஜா தடுமாறி வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற காவியாவும், அவரது உறவினர் ஒருவரும் வெள்ளப்பெருக்கில் சிக்கினர். அவர்களுடன் குளிக்கச் சென்ற மற்றொரு சிறுவன் எப்படியோ பாறையை பிடித்து தப்பித்துக் கொண்ட நிலையில் சிறுவன் கொடுத்த தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பலமணிநேரதேடுதலுக்கு பின் அங்கு மூவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
Follow Us