தேனி மாவட்டத்தில் உள்ள பசுமை வழங்கும் வகையில் சாலை யோரத்தில் மரக் கன்றுகளை நடுதல் மரங்களை வளர்க்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வத் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மரங்களில் பலர் ஆணியடித்து பல்வேறு விளம்பர பலகைகளை வைத்து வருகிறார்கள். இதனால் மரங்களின் ஆயுட் காலம் முடிந்து காய்ந்து போகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காகவே தேனி மாவட்டம் முழுவதும் உள்ள தன்னார்வ இளைஞர்கள் ஒன்றுகூடி கடந்த நான்கு மாதங்களாக தேனி,கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்டசில ஊர்களில் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கி வருகிறார்கள்.

Advertisment

Newlywed couple remove nail in trees

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதற்கு ஆணி புடுங்கும் திருவிழா என்ற பெயர் வைத்திரு க்கிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த மாதம் நடந்த 71 வது சுதந்திர தின விழாவில் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வ இளைஞர்கள் அங்குள்ள உள்ள ஊராட்சி மன்றங்களில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்க வேண்டும், அதை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் மரங்களில் ஆணி அடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அந்த அளவுக்கு தன்னார்வத் தொண்டர்கள் மரங்களில் ஆணி அடிக்காமல் பாதுகாத்தும் மரங்களில் அடைக்கப்பட்டிருந்த ஆணிகளை பிடுங்கி வருகிறார்கள்.

Advertisment

Newlywed couple remove nail in trees

இந்த நிலையில்தான் உத்தமபாளையம் அருகேகோம்பை தேவாரம் செல்லும் சாலை யோரத்தில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கும் பணியில் இளைஞர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது திருமணமாகி ஒரு சில மணி நேரத்திலேயேஅந்த வழியாக காரில் வந்த புதுமண தம்பதிகளான குமரேசனும் சோனியாவும் அந்த தன்னார்வத் இளைஞர்கள் ஆணி பிடுங்கி வருவதை கண்டு உடனே காரை நிறுத்த சொல்லி திடீரென கீழே இறங்கி யாரும் எதிர்பாராதவிதமாக அந்த இளைஞர்களோடு சேர்ந்துஅப்பகுதியில் மரங்களில் அளிக்கப்பட்டிருந்த ஆணிகளை ஆர்வத்துடன் பிடுங்கும் பணியில்ஈடுபட்டனர்.

கோம்பையிலிருந்து பண்ணப்புரம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அந்த ப புதுமண தம்பதியினர் அப் பகுதிகளில் மரங்களை அடிக்கப்பட்டிருந்த அணிகளை பிடுங்கினார்கள்.

மணமகன் குமரேசன் கோம்பை ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மணமகள் சோனியா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். மணக்கோலத்தில் இவர்கள் இருவரும் ஆணியைபிடிங்கிய காட்சியை பார்த்த அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்தப் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.